search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி கடத்தல்"

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஜெகன் கடத்தி சென்று விட்டார்.
    • இதற்கு 16 வயது சிறுமியுடன் ஜவுளிக்கடையில் வேலை பார்த்த ஓல்டு டவுனை சேர்ந்த பெண் ஒருவர் உடந்தையாக இருந்துள்ளார்.

    வேலூர்:

    வேலூர் ஆர்.என்.பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி வேலூரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    கடலூர் மாவட்டம் பென்னாடம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் (வயது 19) திருப்பூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது சிறுமியை தொடர்பு கொண்டார். இருவரும் அதில் அடிக்கடி தகவல்களை பரிமாறத் தொடங்கினர். நாளடைவில் இது காதலாக மாறியது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஜெகன் கடத்தி சென்று விட்டார். இதற்கு 16 வயது சிறுமியுடன் ஜவுளிக்கடையில் வேலை பார்த்த ஓல்டு டவுனை சேர்ந்த பெண் ஒருவர் உடந்தையாக இருந்துள்ளார்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். அதில் சிறுமியை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தனர்.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

    போலீஸ் விசாரணையில் ஜெகன் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் ஜெகனை கைது செய்தனர். அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.

    மேலும் இதற்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

    • ஒரு போஸ்டரில் இருந்த தொலைபேசியின் வாயிலாக சிறுமி தனது குடும்பத்தை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
    • குழந்தை இல்லாததால் சிறுமிய கடத்தியதாக, கைது செய்யப்பட்ட நபர் கூறியுள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 7 வயதில் கடத்தப்பட்ட சிறுமி, 9 ஆண்டுகளுக்குப் பிறகு போஸ்டரின் உதவியால் தனது குடும்பத்துடன் இணைந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை நகரில் அந்தேரி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த சிறுமி பூஜா. தனது 7 வயதில், 2013ம் ஆண்டு ஜனவரி 22ந்தேதி காலையில் சகோதரருடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவரை அணுகிய ஹென்றி ஜோசப் டிசோசா என்பவர் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கடத்தி சென்று விட்டார். இதன்பின்பு, உடனடியாக கர்நாடகாவுக்கு தப்பி சென்றுள்ளார். பூஜாவை விடுதி ஒன்றுக்கு அனுப்பியுள்ளார். சிறுமியின் பெயரை ஆன்னி டிசோசா என மாற்றியுள்ளார்.

    இதன்பின்னர், ஹென்றிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் மீண்டும் மும்பைக்கு திரும்பி வந்துள்ளனர். ஹென்றியும், அவரது மனைவியும், பூஜாவை அனைத்து வீட்டு வேலைகளையும் வாங்கி உள்ளனர். சரிவர சிறுமியை கவனிக்காமல் விட்டு விட்டனர். 16 வயது எட்டிய பூஜாவுக்கும் தனது குடும்ப உறுப்பினர்களை பற்றிய நினைவே இல்லாமல் போயுள்ளது. இவ்வளவுக்கும் சில நூறு மீட்டர் தொலைவிலேயே சிறுமியின் குடும்பத்தினர் இருந்துள்ளனர். ஆனால், ஒரு நாள் குடிபோதையில் ஹென்றி, நீ எனது மகள் இல்லை என பூஜாவிடம் கூறியுள்ளார். இதனால், வருத்தமுற்ற பூஜா, தனது தோழி உதவியுடன் கடந்த காலம் பற்றி அறிய முயற்சித்து உள்ளார்.

    இணையதளத்தில், பூஜா மாயம் தொடர்பான தேடுதலில் ஈடுபட்டு உள்ளார். இதில் இறுதியாக, 2013ம் ஆண்டு காணாமல் போன பூஜா தொடர்பான போஸ்டர் ஒன்று கிடைத்து உள்ளது. அதில் 5 தொடர்பு எண்கள் இருந்துள்ளன. ஆனால், 4 எண்கள் வேலை செய்யவில்லை. எனினும், கடைசியாக இருந்த எண்ணை முயற்சித்ததில் அது, பூஜாவின் அண்டை வீட்டுக்காரரான ரபீக்கின் தொலைபேசி எண் என தெரிந்தது. அவரை தொடர்பு கொண்டு பேசி தன்னை பற்றி கூறியுள்ளார். இதனால், ஆச்சரியமடைந்த ரபீக் பின்பு வீடியோ காலில் வந்து, பூஜாவை அடையாளம் கண்டுள்ளார். பின்னர், பூஜாவின் தாயாரையும் பேச வைத்து உள்ளார்.

    பூஜாவின் தாயாரும் தனது மகளை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டார். இருவரும் போனிலேயே அழுதுள்ளனர். உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் முயற்சியுடன் பூஜா மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். இந்த காலகட்டத்தில் பூஜாவின் தந்தை உயிரிழந்து விட்டார்.

    இதுபற்றி மூத்த காவல் அதிகாரி மிலிந்த் குர்தர் கூறும்போது, 'ஹென்றி கைது செய்யப்பட்டு உள்ளார். தனக்கும், மனைவிக்கும் குழந்தை இல்லாததற்காக பூஜாவை கடத்தியதாக அவர் கூறியுள்ளார். ஹென்றியின் மனைவியும் வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார்' என்றார்.

    9 ஆண்டுகளுக்கு முன் தனது தாயாருடனும், சகோதரருடனும் பள்ளிக்கு சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு பிரிந்து சென்ற பூஜா, போஸ்டர் ஒன்றின் உதவியுடன் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்தது அவருக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மிஸ்டு கால் மூலமாக வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • 2 பேரும் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக காதலித்து வந்தனர்.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி யை சேர்ந்த 16 வயது சிறுமி. இவருக்கு மிஸ்டு கால் மூலமாக நெல்லையை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 19) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த ஒரு வருடமாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    கடந்த மாதம் 23-ந் தேதி கோவைக்கு வந்த ஈஸ்வரன் திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவருடன் திருச்செந்தூரில் வசித்து வந்தார். சிறுமி மாயமானது குறித்து அவரது தந்தை கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த ஈஸ்வரன் சிறுமியை கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். சிறுமியிடம் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை காப்பகத்தில் சேர்த்தனர். சிறுமியிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் விசாரணை நடத்தினர்.

    அப்போது மைனர் பெண் என்று தெரிந்து அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்ற ஈஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள். 

    • கடந்த 24- ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார்.
    • டிரைவர் ராஜா (வயது 28) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என பெண்ணின் தாயார் புகார் கொடுத்தார்.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகேயுள்ள ஓ.காரப்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் கடந்த 24- ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார்.

    இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து தாய் சரஸ்வதி ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அந்த புகாரில் தனது மகளை பெட்டகரப்பள்ளி பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜா (வயது 28) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே 17 வயது சிறுமி கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒரவர் திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வாணியம்பாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கடத்தல் வழக்காக பதிவு செய்து விசுவநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • போக்சோ சட்டம் பாய்ந்தது
    • பைக்கில் சென்றவரை மடக்கிப் பிடித்தனர்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22)இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது இளம்பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்பெண்ணை யுவராஜ் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. 16 வயது சிறுமியை கடத்தியவர் மீது பெண்ணின் தந்தை காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது ஜாகீர் தண்டலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த யுவராஜ் மற்றும் 16 இளம்பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.

    பின்னர் யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்து போச்சோயில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை லங்கேஷ்வரன் கடத்தி சென்றது தெரிய வந்தது.
    • திருமண ஆசைகாட்டி சிறுமியை கடத்தி சென்ற லங்கேஷ்வரன் கோவிலில் வைத்து திருமணம் செய்து உள்ளார்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 படித்து முடிந்து இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு அந்த பகுதியில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்த மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த லங்கேஷ்வரன் (வயது 28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் லங்கேஷ்வரன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமியிடம் திருமண ஆசைகாட்டி அவருடன் ஜாலியாக இருந்தார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே லங்கேஷ்வரன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி தனது பெற்றோரிடம் துணிகளை துவைக்க வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை லங்கேஷ்வரன் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நெகமம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். பின்னர் மதுரை அருகே உறவினர் வீட்டில் சிறுமியுடன் தங்கி இருந்த லங்கேஷ்வரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தி சென்ற லங்கேஷ்வரன் கணுவாயில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்து உள்ளார். பின்னர் மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்ததும், சிறுமியிடம் உல்லாசமாக இருந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் 17 வயது சிறுமியிடம் உல்லாசமாக இருந்து அவரை கடத்தி சென்று திருமணம் செய்த லங்கேஷ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மதுரையில் சிறுமியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக கூறினார்.

    மதுரை

    மதுரை பெத்தானியா புரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி மாயமானதாக தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    தொடர்ந்த போலீசார் எடுத்த நடவடிக்கையில் அந்த சிறுமி அடுத்தநாள் காலை மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அந்த சிறுமி கூறுகையில், நான் என்.எஸ்.கே.வீதியில் வசிக்கும் அரியன் மகன் கார்த்திக் பாண்டியன் (வயது 22) என்பவரை காதலித்து வந்தேன். இந்த நிலையில் அவர் நேற்றுமாலை வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் என்னை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக என கூறினார். இதுதொடர்பாக தனிப்படை போலீசார் கார்த்திக் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்துறை அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    பெரம்பலூர்:

    அரியலூர் மாவட்டம்,செந்துறை அடுத்த பாளையக்குடியை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 20). பொக்லைன் எந்திர டிரைவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொக்லைனை இயக்கி  கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பருத்தி காட்டில் நின்று கொண்டிருந்த 16 வயது சிறுமியை, மகாதேவன் கடத்தி சென்று தனது உறவினர் வீட்டில் அடைத்து வைத்தார்.

    பின்னர் அந்த சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், சிறுமியிடம் இருந்த நகை, ரூ.10 ஆயிரத்தை பறித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தனது உறவினரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு, தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார். அதன்பேரில், உறவினர்கள் சென்னை சென்று சிறுமியை மீட்டு வந்தனர்.

    இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாதேவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மகாதேவன் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மகிளா கோர்ட்டு நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு அளித்தார்.

    அதில், சிறுமியை கடத்தி சென்றதற்காக மகாதேவனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், சிறுமியை வீட்டில் அடைத்து வைத்ததற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதையடுத்து மகாதேவனை போலீசார் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    ×